Monday, March 8, 2010

ஏன் இப்படி...?




எட்டி பார்த்தேன், எதிர்வீடு,


பக்கத்துவீடு, அடுத்த வீடு; என


எல்லா வீடுகளிலும் தலைநிறைய பூ;


அழகான சிரிப்பு.


எனக்கு மட்டும் ஏன் இப்படி.?


கோபம், எரிச்சல், பொறாமை;


தேடி தேடி எடுத்தேன்,


கை நிறைய மாத்திரைகள்.


அள்ளிப் போட்டேன்;


தண்ணீர் ஊற்றினேன்.


அப்பாடா......


இனி என்வீட்டு ரோஜாச் செடியும்


நிறைய பூ பூக்கும்.....



(குறிப்பு:- ரோஜாசெடிக்கு பழைய

மாத்திரைகளைப் போட்டால் நிறைய

பூ பூக்கும் என ஒரு துணுக்கு

படித்ததின் விளைவு.)

24 comments:

காமராஜ் said...

படு எதார்த்தமான நிகழ்வு.
எந்த வித புனைவும் சேர்க்காத.
நேரடி கவிதை.
நல்லா இருக்கு அம்பிகா.

சந்தனமுல்லை said...

:-))

பாய்சன் ட்ரீ மாதிரியா...

நல்லாருக்கு அம்பிகா அக்கா - நல்லா பூக்கட்டும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நிஜமாவா.. இப்பத்தானே ப்ழயமாத்திரையெல்லாம் குப்பையில் போட்டேன்..

மாதவராஜ் said...

//சந்தனமுல்லை said...
:-))

பாய்சன் ட்ரீ மாதிரியா...

நல்லாருக்கு அம்பிகா அக்கா - நல்லா பூக்கட்டும்!//

சிரிப்பை அடக்க முடியவில்லை.

அம்பிகா!
எழுதுவதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறதே....!

காமராஜ்!
இதுல என்ன கவிதையை, அதுவும் நேரடி கவிதையை கண்டாயப்பா?

அம்பிகா said...

மாதவராஜ் said...
\\காமராஜ்!
இதுல என்ன கவிதையை, அதுவும் நேரடி கவிதையை கண்டாயப்பா?\\

புதுசா எழுதுறாளே, பாவம் னு ஏதோ பாராட்டினா அதுவும் பொறுக்கலியா?
போங்கப்பா, நீங்களும்... உங்க கவிதையும்...

மாதண்ணா,

ஒரே சீரியஸ் மேட்டரா எழுதின மாதிரி இருக்கே ன்னு கொஞ்சம் ஜாலியா எழுதினேன்.

சுந்தரா said...

//போங்கப்பா, நீங்களும்... உங்க கவிதையும்...//

இப்பிடில்லாம் மனசைத் தளரவிடக்கூடாது அம்பிகா :)

நிஜமாவே நல்லாருக்கு கவிதை.

சஸ்பென்ஸ் வச்சு அழகா முடிச்சிருக்கீங்க.

ராமலக்ஷ்மி said...

//எனக்கு மட்டும் ஏன் இப்படி.?//

அடடே இதே வார்த்தைகளையும் இயற்கையும் வைத்து, தன்னம்பிக்கை கட்டுரையொன்று பாதியில் நிற்கிறது நான் எடுத்த படங்களுடன்:)!

மாத்திரை போட்டால் நல்லதா? இது ரொம்ப புதுசு!

//இனி என்வீட்டு ரோஜாச் செடியும்
நிறைய பூ பூக்கும்.....//

நல்லாப் பூக்கட்டும்:)! நல்வாழ்த்துக்கள் அம்பிகா!

சாந்தி மாரியப்பன் said...

பூக்கள் நன்றாய்ப்பூக்கட்டும் அம்பிகா.. சொன்னால் சிரிக்கக்கூடாது.. செடிகள் ஸ்ட்ராங்கா வளரணும்ன்னு கால்ஷியம் மாத்திரைகள் அள்ளிப்போட்டவள் நான்.

ஆகவே நம்மைப்பார்த்து சிரிப்பவர்களை நம் வீட்டு பூக்கள் பார்த்து சிரிக்கட்டும் லூஸ்ல விடுங்க :-)))

ராகவன் said...

anbu ambika,

kaamaraajin piriyam pookkiradhu avarin pinnoottangalil...

enakkum avvalavu thirupthiyaa illa ambika!!! idhai innum yosiththu oru pathiva pottirukkalaamnu thonudhu...

anbudan
raagavan

அண்ணாமலையான் said...

நல்லா பூக்க வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

ரசித்தேன்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

Kumky said...

மாத்திரையெல்லாம் வேஸ்டா போகுதேன்னு மாச கடேசில நானே அள்ளி போட்டுக்குவேன்..
வந்த காய்ச்சலுக்கு ஒன்னு, வரபோற காய்ச்சலுக்கு ஒன்னுன்னு...

இப்ப எல்லாத்தையும் செடிக்கு போடனுமா..?

அதிலும் ரோஜாச்செடிக்கு மட்டுமா?

Deepa said...

\\காமராஜ்!
இதுல என்ன கவிதையை, அதுவும் நேரடி கவிதையை கண்டாயப்பா?\\

அங்கிள்,
உங்களுக்கு ஏன் இந்த வேலை?

அக்கா, கண்டுக்காதீங்க..இதே மாதிரி தான் நான் ஒரு கவிதை எழுதி காமராஜ் அங்கிள் பாராட்டினப்பவும் வந்து சொல்லிட்டுப் போனார்.
(உங்க மாதிரி அழகா கவிதை எழுத வரலன்னு பொறாமை!)

:-)))))

ஹுஸைனம்மா said...

மாத்திரையெல்லாம் எரிச்சல் அடக்க உங்களுக்குத்தான்னு நெனச்சா, ரோஜாவுக்கா?

காய்கறிகள்தான் பூச்சிமருந்து அடிச்சு வருதுன்னா, ரோஜாவுமா, அதுவும் வீட்டுரோஜா?? ;-)))

ponraj said...

உயர் திரு.மாதவராஜ் அவர்களுக்கு
கொஞ்சம் பொறாமை!!!!! (சும்மா)


பின் குறிப்பு:அத்தான் தனியா திட்டாதிங்க....

முடிந்தால் call (cellno:9894672532) பண்ணி திட்டுங்க்ள்???
ஹி...ஹி...ஹி...!!!

Thenammai Lakshmanan said...

உண்மைதான் அம்பிகா ஆனா கொஞ்சம் ஜெர்க்க் ஆகிட்டேன்

பா.ராஜாராம் said...

நல்லாருக்குடா அம்பிகா.

மாது லூசுடா..

// அக்கா, கண்டுக்காதீங்க..இதே மாதிரி தான் நான் ஒரு கவிதை எழுதி காமராஜ் அங்கிள் பாராட்டினப்பவும் வந்து சொல்லிட்டுப் போனார்.
(உங்க மாதிரி அழகா கவிதை எழுத வரலன்னு பொறாமை!)

:-)))))//

இதேதான், :-)

அம்பிகா said...

நன்றி கமராஜ் அண்ணா.

நன்றி முல்லை

நிஜம் தான்னு அமைதிசாரலும் சொல்றாங்க. நன்றி முத்துலெட்சுமி

நன்றி சுந்தரா.

அந்த பதிவுக்காக காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

அப்பாடா!! எனக்கும் ஆதரவாய் ஒருவர். நன்றி அமைதிசாரல்.

ராகவன்,
உங்கள் வெளிப்படையான விமர்சனம் என் எழுத்துக்களை மேலும் செதுக்க உதவும். நன்றி ராகவன்.

நன்றி அண்ணாமலையான்.

நன்றி பாலாசி.

நன்றி அமித்தம்மா.

கும்க்கி,
உங்கள் பின்னூட்டம் படித்து சிரிப்பை அடக்க முடியவில்லை. இனி பேசாமல் செடிக்கே போட்டுவிடுங்கள். பகிர்வுக்கு நன்றி.

தீபா,
உன்னையும் விட்டு வைக்கவில்லயா?
ஆஹா, எனக்கும் ஆதரவுக்கு ஆள் இருக்கிறார்கள.

ஹுஸைனம்மா,
பகிர்வுக்கு நன்றி.

பொன்ராஜ்,
உனக்கு திட்டு உண்டு, கண்டிப்பாக.

வாங்க பா.ரா.
ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

மாதண்ணா,
பா.ரா. எனக்கு தான் சப்போர்ட்.
அதனால் கவிதைகள் தொடரும்.

அம்பிகா said...

தேனம்மை,
உங்கள் பின்னூட்டம் விடுபட்டுஇருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான ரோஜா மணம்; யதார்த்தமான கவிதை.

Anonymous said...

விட்டமின் மாத்திரை மட்டும்தான். மத்த மாத்திரை இல்லை.
கவிதை நல்லா இருக்கு.

VijayaRaj J.P said...

நிறைய கவிதைகள் எனக்கு புரிவதில்லை.

இந்த கவிதை நன்றாக புரிந்தது.

அனால் மாதவராஜ் அப்படி சொல்ல காரணம் என்ன என்று புரியவில்லை

என்னது நானு யாரா? said...

அட பயங்காட்டிடீங்களே தோழி! செடிக்குப் போடத்தானா மாத்திரைகள். நன்றாக இருக்கிறது, உங்களுடைய நகைசுவை சிந்தனைகள்.

உங்க Follower-ஆ ஆகி இருக்கேன். தொடர்ந்து படிக்க வருகிறேன் தோழி! வாழ்த்துக்கள்!