Tuesday, June 8, 2010

பதின்மத்தின் வாயிலில்...

.
அந்த வீட்டின் மாடியில் இருந்த சிட்அவுட்டில், மூன்று, நான்கு சிறுமிகள்

12, 13 வயது நிரம்பியவர்கள், கோடைவிடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு

வந்திருந்தனர். ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், அந்த இடத்தையே கல

கலப்பாக்கிக் கொண்டிருந்தனர். நகரத்தில் இருந்து வந்த அவர்களுக்கு இந்த

சூழல் பிடித்து விட்டது போலும், மிக உற்சாகமாய் விளையாடிக் கொண்டி

ருந்தன, அந்த பதின்ம அரும்புகள்.



நான்கைந்து நாட்கள் ஆகியிருக்கும், அந்த சிட்அவுட் மறுபடி அமைதியாகி

விட்டது. ஊருக்கு போய் விட்டிருப்பார்கள் என நினைத்தோம். ஆனால்

விஷயம் வேறாக இருந்தது.


இவர்களது உற்சாகமான விளையாடல்கள், அங்கிருந்த நான்கைந்துவிடலை

சிறுவர்களை, ( அவர்களுக்கும் 15 வயதுக்குள் தான் இருக்கும் ) ஈர்த்திருக்

கிறது. வழக்கமான கேலி, சீண்டலில் தொடங்கி, பின்னர் அதுவேஅதிகமாகி

ஜாடையில் பேச ஆரம்பித்து இருக்கின்றனர். அதில் ஒருவன் தன்மொபைல்

போனை, அவர்கள் வீட்டு சன்ஷேடில், தூக்கி போட, இவர்கள் சன்ஷேடில்

இறங்கி போனை எடுத்து பேசியிருக்கின்றனர். அவர்கள் வீட்டு போன் நம்பர்

அட்ரஸ், எல்லாம், அந்த பையன்கள் விசாரித்து இருக்கின்றனர். அதற்குள்

வீட்டிலிருந்த உறவினர், சந்தேகப் பட்டு கவனித்ததில் இவர்களது விளயாட்

டுகள் தெரியவர, கண்டித்து, அவரவர் ஊருக்கு அனுப்பியுள்ளார். அந்தம்மா

தாங்கமுடியாமல், `பச்சபுள்ளைகன் னு நெனச்சோம், இப்பிடி பண்ணிடிச்சு

களே‘ என அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.



பதின்மங்களில் எதிர்பாலின ஈர்ப்பு சகஜம் தானென்றாலும், 12, 13 வயதில்

செல்போன் பரிமாறிக் கொள்வது, அதுவும் நான்கேநாள் பழக்கத்தில் என்பது

மிக அதிகமாகத் தான் பட்டது. படிக்க வேண்டிய வயதில், இப்படி கவனம்

சிதறும் போது, இவர்களது எதிகாலம் எப்படியிருக்கும் என்ற கவலையும்

எழுகிறது.
.
.

19 comments:

அமுதா கிருஷ்ணா said...

இப்ப பதின்ம வயது இப்படி தான் இருக்கிறது. மிக சீரியஸ் ஆக இருக்கிறார்கள். எல்லாம் தெரிகிறது. கொஞ்சமும் வெள்ளந்தி தனம் இல்லாது குழந்தை உருவில் பெரியவர்கள் போல்..கலிகாலம்..

Chitra said...

oops! இது என்ன கலாட்டா?

ஹேமா said...

அந்த வயதின் கலகலப்பு அது.பெரியவர்களைப் பயப்பட வைக்கிறது.தப்பாவும் தெரிகிறது.
தப்பில்லை என்பதாயும் இருக்கு அப்பிகா.

Priya said...

பதின்மத்தின் வாயிலில் எப்போதும் கவனம் அவசியம்தான்.

Anonymous said...

பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

M. Azard (ADrockz) said...

பிஞ்சிலேயே பழுக்குறது இது தானோ !!!!

பத்மா said...

ஹ்ம்ம் கவலையா தான் இருக்கு

ராமலக்ஷ்மி said...

கவலை தரும் விஷயம்.

ராஜவம்சம் said...

கவலை அளிக்கும் பதிவே

சும்மாவா சொன்னாங்க
பெண் பிள்ளைப்பெற்றால்
வயிற்றில் நெருப்பை
சுமத்துவதுபோல் என்று

காமராஜ் said...

கவனிக்க வேண்டிய விஷயம்.

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு சகோதரி.

பெற்றோர்கள் தங்கள் பதின்ம வயது பிள்ளைகளின் மீது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டியது மிக அவசியம்.

அமைதி அப்பா said...

அவர்கள் இருபாலர் பள்ளியில் படிப்பவர்களாக இருந்தால், இப்படி நடக்க வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். என் மகனுக்கு சிறு வயதிலிருந்தே அதிக மாணவிகளுடன் நட்புடன் பழகும் சூழலில் வளர்ந்து, இன்று கல்லூரிக் கல்வியும் முடிக்கும் தருவாயில் உள்ளான்.இன்றும் அவன் மாணவிகளுடன் பழகினாலும், அவர்கள் மீது ஆரம்பத்திலிருந்தே ஒருவித மரியாதையுடன் கூடிய நட்புடன்தான் பழகிவருகிறான். அதனால் எங்களுக்கு
ஆண், பெண் வேறுபாடு தெரியாமல் போய்விட்டது.
ஆனால் அவனுடைய 14,15 வயதில் எனக்கு பயம் வந்தது. என்னுடைய நண்பர்களுடன் இது பற்றி பகிர்ந்துகொண்டுள்ளேன்.

"உழவன்" "Uzhavan" said...

இதற்கும் எதிர்காலத்திற்கும் சம்பந்தமில்லை என்றுதான் தோணுகிறது.

ஹுஸைனம்மா said...

மனசுல கள்ளமில்லன்னாலும், புரியாத வயசுங்கிறதால பெரியவங்க கவனமா இருக்கிறது நல்லது. இப்ப வர்ற சினிமா/சீரியல்கள் தாக்கம் அப்படி!!

Deepa said...

க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் தான்க்கா.
ப‌ள்ளிகளில் கட்டாயமாக, க‌ல்லூரிகளில் கூட‌ வ‌குப்புகளுக்குள் செல்ஃபோன் அனும‌திக்காம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌து.

AkashSankar said...

செல்போனை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை...நாம் அவர்களுக்கு அமைத்து கொடுத்திருக்கிற சூழலையும் கவனத்தில் கொள்ளவேண்டும்...

vasan said...

ச‌ரா'ச‌ரி' க‌ள் எங்கும் க‌வ‌னிக்க‌ப்படாம‌ல்
எதிர்ம‌றைக‌ள் காட்சிப் ப‌டுத்த‌ப்ப‌டுவதால்,
ச‌ரிக‌ள் சில‌ ச‌ம‌ய‌ம் ச‌ரிவுக்குப் போகிறார்க‌ள்.
பதின்ம‌ வ‌ய‌து ப‌ய‌ம‌றியாது. பெற்றோர் ம‌ற்றும்
சுற்ற‌த்தின் பார்வையும் அதிக‌மாய்
பொருட்செல்வ‌ங்க‌ளில்,ம‌க்க‌ட்செல்வ‌ங்க‌ளை விட‌.

ponraj said...

ஊரில்,சிலருக்கு இதுதான் பொழுதுபோக்கு...

goma said...

என்ன நடக்குது இங்கே ...