Friday, August 6, 2010
போபால்...தலைமுறைகள் தாண்டியும் தொடரும் சோகம்...
..
கண்கள், முகம் அத்தனையும், நெருப்பாய் எரிய, அந்த
டிசம்பர்மாத நள்ளிரவில், உயிரை காப்பாற்றிக் கொள்ள
வேக வேகமாய் ஓடினோம்; வேக வேகமாய் ஓடி,
வேக வேகமாய் நச்சுக் காற்றை உள்வாங்கி மக்கள் விழுந்தனர்.
குழந்தைகள் எங்கேயென்று தாய்க்கு தெரியவில்லை;
குழந்தைகட்கு தன் தாய் எங்கேயென்று தெரியவில்லை.;
ஆண்களுக்கு தன் குடும்பம் எங்கேயென்று தெரியவில்லை.
போபால் விஷவாயு தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரு பெண்மணியின்
நினைவுகூறல் இது. `உலகின் மிக மோசமான ரசாயன பேரழிவு’ என
வர்ணிக்கப் படும் போபாலின் கொடூர நிகழ்வு குறித்து அறிந்திருந்தாலும்
கொஞ்சம் ஆழமாய் உட்செல்லும் போது அறியவரும் உண்மைகள்,
உயிரை உலுக்குகின்றன.
இத்தகைய ஆபத்தான தொழிற்சாலை, எங்கள் மண்ணுக்கு தேவை
யில்லை என பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளால் நிரா
கரிக்கப்பட்ட யூனியன் கார்பைட் நிறுவனம், இந்திய மண்ணில் ,
போபாலில் தன் தொழிற்சாலையை தொடங்குகிறது. நெருக்கமான
குடியிருப்புகளுக்கு அருகாமையில் இத்தகைய ஆபத்தான தொழிற்
சாலை அமைக்கப்பட்டது முதல் தவறு.. .தொடர்ந்த விபத்துகள்,
பாதுகாப்பு ஏற்பாடுகளை அலட்சிய படுத்துதல் என பல்வேறு குளறு
படிகள். 1983ல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய ஒரு குழு அமைக்கப்
பட்டு, அதன் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த
பட்டன., ஆனால் இங்கில்லை, வெர்ஜீனியாவில் உள்ள அதன் இன்னொரு
தொழிற்சாலையில். ஏனெனில் அமெரிக்கர்களின் உயிர்கள் மட்டுந்தானே
மதிப்பு வாய்ந்தவை. போபால் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருக்கிறது
என பலரது எச்சரிக்கையையும் அலட்சியப் படுத்தியதன் விளைவு, அந்த
கொடூரம் நிகழ்ந்தே விட்டது. 42 டன் மெத்தில் ஐசோசயனைட், மொத்த
மாக ஒரே கலனில் சேமிக்கபட்டிருந்தது விபத்தின் கொடூரத்தை மிக
மோசமானதாக்கி விட்டது..
முதல் நாளில் 3,000 பேருக்கு மேல், முதல் வாரத்தில் 8,000 பேர், மொத்தம்
23,000 என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டது. 2000 வருடத்துக்கு
பிறகான இழப்புகள் கணக்கில் கொள்ளப் படவில்லை. 1,00,000
மேலானோர் மிக மோசமாக பாதிக்கப் பட்டனர். பார்வை கோளாறுகள், ,
சுவாச சீர்கேடுகள் நரம்பு மண்டல பாதிப்புகள், கருச்சிதைவுகள், இன்னும்
பல வகை்படுத்த முடியா பாதிப்புகள்.
சம்பவத்துக்கு பின், சிதைந்த நிலையில் பிறந்த
சிசுக்கள், கண்ணாடி சீசாக்களில் ஸ்பெஸிமன்களாய் வைக்கப்
பட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்த போது, ஒரு தாயாய்
அடிவயிறு கலங்கி போனேன். மீண்டுமொருமுறை அதைப் பார்க்கும்
திராணியில்லாததால் பிரசுரிக்கவில்லை. இதைப் போன்ற நிகழ்வு
உலகின் எந்த மூலையிலும் நடக்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட, இந்த பெயரில்லாத, குரலில்லாத பல ஆயிரம் அப்பாவி
களுக்கு, 26 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை. யூனியன் கார்பைட்
நிறுவனத்தை வாங்கியுள்ள டவ் கெமிக்கல்ஸ், அதனுடைய எந்த கடன்
களுக்கும் பொறுப்பேற்க மறுத்து விட்டது. யூனியன் கார்பைடின் அதிகாரி
கள் தப்பியோடி விட, அந்நிறுவனத்தின், எஞ்சியிருந்த அத்தனை ரசாயன
நச்சுகளும், இன்னமும் அகற்றப் படவில்லை. அதன் பின்னரான 25 ஆண்டு
கால பருவமழையில் அத்தனை நச்சுகளும் மண்ணின் அடி ஆழம் வரை
ஊடுருவி, நிலத்தடி நீரை மோசமாக்கி வைத்திருக்கிறது. வேறுவழியின்றி,
20,000க்கும் மேலானோர் அதை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
விஷவாயுவின் பாதிப்புகள், தலைமுறைகள் தாண்டி, இன்னும் தொடர்ந்து
கொண்டுதானிருக்கிறது. குழந்தைக்கு புகட்டும் தாய்பாலில் கூட விஷத்தின்
வீரியம் இன்னும் இருக்கிறது. சம்பவத்தில் உயிர் தப்பிய ரஷ்தா என்னும்
பெண்மணி, தன் ஐந்து மகன்களை புற்றுநோய்க்கு காவு கொடுத்தவர்
சொல்கிறார்.
``சம்பவத்தில் உயிரிழந்த அத்தனை பேரும் அதிர்ஷ்டசாலிகள்;
உயிர் தப்பிய நாங்கள் தான் துரதிர்ஷ்டசாலிகள்’’
போபால் சம்பவத்திலிருந்து பாடம் கற்று கொண்டதாக `டவ் கெமிக்கல்ஸ்
கூறியுள்ளது.. இவர்கள் பாடம் கற்றுக் கொள்ள பலியானவை, ஆயிரக்
கணக்கான அப்பாவிகளின் இன்னுயிர்கள்.. ஆனால் நம் இந்திய அரசாங்கம்
பாடம் கற்று கொண்டதாக தெரியவில்லை.
R.தினேஷ் என்பவர் இந்திய ஜனநாயகத்தை பற்றிக் கூறியது இது.
ஜனநாயகம் இனிமேலும்,
``of the people, by the people, for the people'
என்பதில்லை.
``off the people, buy the people, far the
people''
என்றாகிவிட்டது. என்கிறார். இதேநிலை நீடித்தால், `எங்கள் பாரததேசம்’’
என்று தோள் தட்ட முடியுமா..?
.
.
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
நம் ஆட்சியாளர்கள் செய்யும் செய்கைகளால், நம் மனநிலை `எங்கள் பாரததேசம்’’ என்று தோள் தட்ட கூடியவையாக இல்லை.
இன்னும் தீராத வலிதான் .
புலவன் புலிகேசி பதிவிலும் இந்தச் சோகம் நிறையப் படித்தேன் அம்பிகா.
அனைவருக்கும் வலியான ஒன்று..
மனதை உருக்குகிறது
என்ன எழுத என தெரியவில்லை
Ethey nilai needithaal India endra ondru Selippillaamal Pooividum.
Nam Desam Vattraatha pala jeeva nathikalai Kondathu. Andraya Gangaikkum Endraya Gangaikkum eththunai Vithyasangal theriyumaa?
Andraya Gangai Pala kirumigalai azhlikkum alavirkku Thuuimaiyanathaagavum Punithamaanathaagavum irunthathu.
Eppothu athan thanithuvamum punithaththanmaiyum kettu vittathu.
Panathirkka Alaiyum Pinanthinnigal Kaikalil Nam Nadu irunthaal Nam Nattil Idhu poola Innum Pala Soogamaana Sambavangal niraya irukkindrana. Namakku Theriya Vanthathu Intha Bobhal Sambavam Mattumay.
Etharkku Varunthukiren...
Veerenna Seiyya Mudiyum Ennaal...
நல்ல கட்டுரை. ஜனநாயகம் பற்றிய கடைசி ஆங்கில வரிகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல உள்ளன.
//போபால்...தலைமுறைகள் தாண்டியும் தொடரும் சோகம்...//
தலைப்பில் பிழை இருக்கிறது. இது 'தொடரும் சோகம்' அல்ல 'தொடரும் துரோகம்' ஆகும்.
//``off the people, buy the people, far the
people''//
யதார்த்தத்துல இதுதான் மேடம் இருக்கு, கசக்குற உண்மை....:(
நேர்மையற்றவர்களாக.. பணத்திற்காக ப்ராஜக்ட்களில் கையெழுத்துப்போடுபவர்களாக தலைமைகள் இருக்கும் வரை இவை தொடரும். :(
\\சம்பவத்தில் உயிரிழந்த அத்தனை பேரும் அதிர்ஷ்டசாலிகள்;
உயிர் தப்பிய நாங்கள் தான் துரதிர்ஷ்டசாலிகள்//
வேதனையின் உச்சத்தை
வெளிப்படுத்தும் வரிகள்.
உணர்ச்சி மிக்க பதிவு.
//``சம்பவத்தில் உயிரிழந்த அத்தனை பேரும் அதிர்ஷ்டசாலிகள்;
உயிர் தப்பிய நாங்கள் தான் துரதிர்ஷ்டசாலிகள்’’// இப்போது வாழ்பவர்களுக்கு இந்த நிலைமைதான் போலும். எதையும் சரிப்படுத்தவில்லை. சரிப்படுத்தப்போவதுமில்லை.
வலி இன்னும் பல காலம் இருக்கும்...
அலட்சியம்... காசு... இது தான் மற்றவர்களை பற்றி நினைக்காம இருக்க வைக்குது... :(
//``off the people, buy the people, far the
people''// வேதனை .... எப்போ மாறும் ?
நம் இந்திய அரசாங்கம்
பாடம் கற்று கொண்டதாக தெரியவில்லை.
கற்றுக் கொண்டிருக்கும்.. இன்னும் என்னென்ன வழிகளில் சம்பாதிக்கலாம் என்று
தீராத வலி
அம்பிகா!
இதுகுறித்து சொல்லப்படுவதற்கும், அறியப்படுவதற்கும், ஆத்திரப்படுவதற்கும் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. இருப்பினும், இதுவரை நீ எழுதிய பதிவுகளில் இது முக்கியமான, சமூகப் பார்வை கொண்ட அழுத்தமான பதிவு. பெருமையாய் உணர்கிறேன்.
இன்னும் தீராத வலிதான்.
மனதை மிகவும் பாதித்த நிகழ்வு அம்பிகா,,
///``சம்பவத்தில் உயிரிழந்த அத்தனை பேரும் அதிர்ஷ்டசாலிகள்;
உயிர் தப்பிய நாங்கள் தான் துரதிர்ஷ்டசாலிகள்’’///
பதிவை படித்தப் பின்,எழுத ஒன்றும் தோன்றவில்லை!!!
வலிமையான பதிவு!!!
ஆறாத ரணம்.
நல்ல பதிவு அம்பிகா.
அருமையான இடுகை அம்பிகா அக்கா.
கடைசி வரிகள் சாட்டையடி.
Post a Comment