.
.
ஈ.மெயிலில் வந்த ஒரு உண்மை சம்பவம் இது.
அவனுக்கு வயது 22. மாநிறம். அதிர்ந்து பேசமாட்டான். மிக அமைதி
யானவன். சொந்த ஊர் என்னவோ திருவண்ணாமலைதான். ஆனால்
வசிப்பது வறுமைக்கோட்டுக்கு கீழே. அவனுடைய தந்தை. தேர்ந்த
நெசவாளி. அவருக்கு உதவியாய் அவனது அம்மா. கல்லூரி செல்லும்
வயதில் ஒரு தங்கை. அவனுடைய தந்தை என்னமோ ஸ்ரீபெரும்புதூர்
ஜாம்பவான்களுக்கு அடிபணியாதவர்தான். ஆனால் அவன் பணிந்துபோக
தயாராகயிருந்தான். வறுமைக்கோடு. எப்பாடுபட்டேனும் இந்த கோட்டி
லிருந்து விலகி தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு
வந்துவிட வேண்டும் என்கிற வெறி.
பெரும் முயற்சிக்குப் பின்னர், துபாயில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்
அவனுக்கு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் ரூ.10000. பிறந்தது
முதல், அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தன் பெற்றோரை பிரிந்த
தில்லை அவன். பணியில் சேர்ந்த பின் 2 வருடத்துக்கு ஒரு முறை
தான் வீட்டுக்குப் போக முடிந்தது. இந்த பிரிவு அவனை வருத்தமடையச்
செய்தாலும், தன் குடும்பம் நல்ல பொருளாதார நிலைமைக்கு உயர இது
அவசியம் என்று கருதி தன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.
பணம்..பணம்..பணம்..இது ஒன்றே முக்கியம். குடும்பத்தின் வறுமை
ஒழிய தன்கவனம் முழுதும் பணம் சம்பாதிப்பதிலேயே இருக்க வேண்டும்
என்பது அவனுடைய லட்சியம், வெறி, சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு
எல்லாமே. காலை 6:30 மணிக்கு அவனுடைய ஷிஃப்ட் துவங்கும். ஆறு
மணிக்கு முன்னே அலுவலகத்துக்குச் சென்றுவிடுவான்.
அன்று திங்கள் கிழமை. பனி விலகாத காலை நேரம். ஆறாவது தளத்தில்
உள்ளது அலுவலகம். தரைத் தளத்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தி
னான். ஆறாம் தளம் சென்றடைந்தவுடன் லிஃப்ட் கதவு திறந்தபோது கீழே
விழுந்தது அவனுடைய உயிரற்ற உடல்! அங்கிருந்த செக்யூரிட்டிகள்
அவனுடைய டீமுக்கு தகவல் அளித்து அவனை மருத்துவமனைக்குக்
கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த
மருத்துவர் மறுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ்
நோ மோர்". 'டெட் ஆன் அரைவல்' என்று ரிப்போர்ட்டில் பதிவு
செய்தார்.
பின்னர் அவனுக்கு நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்தபோது தெரிந்தது,
அவனுக்கு புகை, குடி என்று எந்த பழக்கமும் இல்லை. ஒவ்வொரு
மாதமும் அவனுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி பணத்தை தன்
குடும்பத்துக்கு அனுப்பிவிடுவான். அந்த 3,000ல் போக்குவரத்து,
அலைபேசி, உணவு ஆகியவற்றிற்கான செலவுகள் அடங்கும். செலவைக்
கட்டுப்படுத்த அவன் மேற்கொண்ட ஒரு முடிவு..தினமும் காலை
உணவைத் தவிர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உண்ணுவது.
இந்த பழக்கம் வெகு நாட்களாய்த் தொடர்ந்து உடலுக்குள் வாயு உருவாகி
அது இதயத்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வயதில்
மாரடைப்பு! இது ஏதோ கற்பனையாக எழுதப்பட்ட வரி அல்ல
அவனுடைய உணவு பழக்கத்தை அவன் நண்பர்கள் கூறக்கேட்டு அறிந்த
பின் மருத்துவர் சொன்னது.
பணம் ஒன்றையே பிராதனமாகக் கருதி பரபரவென பறந்துகொண்டிருக்கும்
இந்த யுகத்தில், நம்மில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்த்த
விடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும்
காரணம்.."டைம் இல்ல ". சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல்
அப்படி என்ன கிழித்துவிடப் போகிறோம்
இதற்கு மேல் இதைப்பற்றி நீங்களே சொல்லுங்கள்!
.
.
27 comments:
உழைப்பதற்கு உடல் நலம் மிக அவசியம்,என்பதை கூறும் பதிவு!!!
இவரைப் போல் காலை உணவு உண்ணாமல் எங்க அலுவலகத்தில் நிறைய பேர் இருக்காங்க....
முதல்ல அவங்கள படிக்கச்சொல்றேன்....
உடலும் உயிரும் இருக்க தான் காசு... இரண்டும் இல்லையினா காசு எதற்கு?
நல்ல பகிர்வு சகோ... நன்றி
சிங்கப்பூரில் இருக்கும் பெரும்பாலோர் காலை உணவு எடுத்துக் கொள்வதே இல்லை.. எனக்கு தெரிந்த அனைவருக்கும் இத்தகவலை மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் ..
பகிர்விற்கு மிக்க நன்றி ...
இன்றைய இளம்தலைமுறையினர் பெரும்பாலும் இப்படித்தான்...வருத்தமாயும் பயமாயும் இருக்கிறது...
இந்த தகவல் (பெரும்பாலும் கூட்டு மின்னஞ்சலில் வரும் தகவல்களைப் போல) பொய்யானது என்று படுகிறது.
காலையில் சாப்பிட வேண்டும் என்று சொல்வதற்காக இப்படி ஒரு கட்டுக் கதை புனைந்திருக்கிறார்கள்.
காலை உணவை தவிர்க்கக் கூடாது என்று நானும் உறுதியாக நம்புகிறேன். ஆனால், ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டதால் ஒருவருக்கு மாரடைப்பு வந்தது என்பது கொஞ்சம் ஓவர். அப்படிப் பார்த்தால் இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியை தாண்டியிருக்கவே முடியாது.
மா சிவகுமார்
காலையில் உணவைத்தவிர்ப்பது உடல் நலனிற்கு உகந்ததல்ல. விரதம் இருப்பவர்களுக்கும் சேர்த்துதான்.
கொடுமைங்க.
ஸ்கூலுக்கு போகும் கு ழந்தைகள் காலை உணவை தவிர்க்கிறதே.
சோகமான விசயம்.. அம்பிகா
எங்க குடும்பத்தில் இப்படி காலையுணவு சாப்பிடாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள் .. சிலருக்கு அப்படியே பழகி இருக்கிறது. ஆனால் இவர் காசு சேர்ப்பதற்காக உடலை கவனிக்காமல் விட்டிருக்கிறார் :(
Blogger கே.ஆர்.பி.செந்தில் said...
சிங்கப்பூரில் இருக்கும் பெரும்பாலோர் காலை உணவு எடுத்துக் கொள்வதே இல்லை.. எனக்கு தெரிந்த அனைவருக்கும் இத்தகவலை மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் ..
பகிர்விற்கு மிக்க நன்றி ...
//
எனக்கு அனுப்புலையே பாஸ்...அவ்வ்வ்வ்
nalla pagirvu அம்பிகா.
ezhutthil muthirvu koodi koodi varugirathu. vaazhthugal!
(translation problem)
நல்ல பதிவு.
அவசியமான இடுகை
அதிர்ச்சியாகவும், அந்தத் தம்பியை நினைத்து வருத்தமாகவும் இருக்கிறது சகோதரி. கிட்டத்தட்ட நானும் அப்படித்தான் இங்கிருக்கும் நாட்களில் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறேன். பணத்தை மிச்சப்படுத்துவதற்காக அல்ல. இந்த ரொட்டியைச் சாப்பிடுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. நானும் காலை 5 மணிக்கெல்லாம் அலுவலகம் செல்பவன், இதனாலும் காலை உணவைத் தவிர்க்கவேண்டியிருக்கிறது. அவ்வப்போது சில தேனீர்கள் மட்டுமே..
இனி கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையை இந்தப் பதிவு தருகிறது. பகிர்வுக்கு நன்றி சகோ..
எல்லோரையும் சிந்திக்க வைக்கும் நல்ல பகிர்வு அம்பிகா.
பகிர்விற்கு நன்றி
சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும் என்பதை உணர வேண்டும்
இப்படிப்பட்ட நபர்களை நானும் பார்த்திருக்கிறேன்.
சுவரில்லாமல் சித்திரம் வரையமுடியாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
நம்ப முடியவில்லை! 22 வருடமாகிறது நான் காலை உணவு சாப்பிட்டு.நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.கூடுதல் தகவல் வாரம் ஒருமுறை 1/2 விஸ்கியும்,ஒரு நாளைக்கு 15 சிகரெட்டும் பிடிக்கிறேன்.அதிர்ச்சி தகவல் நான் இதுவரை எந்த பழங்களையும் சாப்பிட்டதில்லை.(விஸ்கி என்னவாம் என்று யாரும் கேட்டுவிட வேண்டாம்) என் வயது 42.
தயவு செய்து, இங்கே சென்று படிக்கவும்.
http://kurumbugal.blogspot.com/2010/07/blog-post_26.html
பின்பு கருத்துச் சொல்லவும்.
திரு மா.சிவகுமார் அவர்களின் எண்ணம்
எனக்கும் சரியாகவேப்படுகிறது.
//இந்த பழக்கம் வெகு நாட்களாய்த் தொடர்ந்து உடலுக்குள் வாயு உருவாகி
அது இதயத்திற்குச் செல்லும் குழாயை பாதித்து.//
இப்படியெல்லாம் நடக்குமா? சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில்
அல்சர்தான் வரும்.
சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல்
அப்படி என்ன கிழித்துவிடப் போகிறோம்
அவசியமான எச்சரிக்கை. எனக்குத் தெரிந்து உணவைத் தவிர்த்து, நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிட்டு உடல் நலக் குறைவை உண்டாக்கிக் கொண்டவர்கள் அநேகம்.
தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
இயன்றபோது எழுதவும்.
http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_13.html
ya aunty.. 2009-2010 i was not taking break fast everyday most mo the times i ll skip the whole day's food.. hereafter i ll be good in takin food.. thanks for the worthy thing... <3
உழைப்பதற்கு உடலில் தெம்பு வேண்டுமே...
அந்த தெம்பு நாம் நன்றாக சாப்பிட்டு நம் உடல்நிலையை பார்த்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம்...
காலை உணவை உதறும் அனைவரும் படித்து உணர வேண்டிய ஒரு பதிவு..
நல்ல எச்சரிக்கையான பதிவு..
மனதைக் கலக்கிவிட்டது உங்கள் பதிவு,.
வயிற்றுப் பிழைப்பு
என்று வெளி நாட்டுக்கு வந்துவிட்டு வயிற்றைக் கவனிக்காமல் போன உயிர்.:( பகிர்வுக்கு நன்றி அம்பிகா.
Post a Comment