Friday, August 13, 2010

``அந்த அரபிக்கடலோரம்’’ ஒரு சின்னபெண்ணின் பார்வையில்

..

தொலைக்காட்சியில், பம்பாய் படப்பாடலான, `அந்த அரபிக்கடலோரம்‘

ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிலிருந்த உறவினர்கள், குழந்தைகள் ரசனை

யோடு பார்த்துக் கொண்டிருந்தனர். என்னிடம் ஏதோ கேட்க வந்த பக்கத்து

வீட்டு சிறுபெண், எட்டு வயதுக்குள் இருக்கும், அவளும் பாடலை

பார்த்துக் கொண்டிருந்தாள்.பாடலின் இடையில் ஒருக்காட்சியில், அரவிந்தசாமி, மணீஷாகொய்ராலா

வின் கைகளை பற்ற, மணீஷா கைகளை விடுவித்துக் கொள்ளும்போது,

வளையல்கள் மட்டும் கழன்று அரவிந்தசாமியின் கைகளில் இருக்கும்.

அதைப் பார்த்த அந்த சிறுபெண், ``ஈட்டுக்கு (அடகுக்கு) கழட்டுறாங்க’’

எனக் கூற, அனைவரும் சிரித்தனர்.


அந்தக் காட்சிக்கான அவளது புரிதல் புரிந்த போது..., எனக்கு சிரிப்பு

வரவில்லை.
.
.

22 comments:

rooto said...

இப்பதான் நாலஞ்சு பதிவுகளை படிச்சிட்டு ஏன் நாய்கள் எழுதிதொலைக்குதுதுகளோ என தெரியாமல் இருந்தது. பொழுதுபோக்குக்கு மொக்கை மதிவுகள் இடுபவர்களை பற்றிசொல்லவில்லை. ஒருவன் "உடல்தானம்/உறுப்பு தானம் எண்டு 50% மேல பொய் எழுதிவச்சிருகிறான்!! அதை நல்ல ஆரோக்கியமான தகவல் எண்டு என்னொரு எழவு வந்து கூவுது!! அதுக்குள்ள உங்களின் மேற்படி சிறு பகிர்வு எனக்கு மன அமைதியை தந்தது! கருத்து சங்கடத்துக்குரியதாயினும் அதை விளக்கம் தராமல் பகிர்ந்தவிதம் அருமை!! வாழ்க!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

sorna said...

வலி தரும் பகிர்வு!!

கே.ஆர்.பி.செந்தில் said...

ஒண்ணுமே சொல்ல முடியல ...

Anonymous said...

சில விஷயங்கள் இப்படித்தாங்க. சின்ன வயசில ஒரு அர்த்தத்தில புரிஞ்சு வைச்சிருப்போம். பெரிசானதும்தான் புரியும் :)

LK said...

silavatrai veetu varaverparaiyil paarpathai thavirkkavendum

வெறும்பய said...

என்னத்த சொல்ல...

வினோ said...

இளமையில் வறுமை... ஒன்னும் பண்ண முடியாது போல... :(

தேவன் மாயம் said...

அதைப் பார்த்த அந்த சிறுபெண், ``ஈட்டுக்கு (அடகுக்கு) கழட்டுறாங்க’’

எனக் கூற, அனைவரும் சிரித்தனர்.
//

புள்ளைய எவனும் ஏமாத்த முடியாது!!

ஹுஸைனம்மா said...

சிறுவர்களின் கண்ணோட்டமே தனிதான்.

இதில் அப்பெண்ணீன் வறுமையும் தெரிகிறது, வருத்தமே!!

யாரோ ஒருவன் said...

வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை

ராமலக்ஷ்மி said...

வருத்தம் தரும் பகிர்வு அம்பிகா.

sundar said...

சின்ன வயசிலயே ......ம்ம்...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வலியை வளையல்களில் புகுதியவிதம் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி .

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

உங்கள் இந்தப் பதிவைச் சுட்டிருக்கிறேன். இங்கே

புரிதல்களின் சிக்கலை புரியவைத்த உங்கள் எழுத்து நடை சிறப்பு.

மதுவதனன் மௌ.

R.Gopi said...

இது தான் இளமையில் வறுமையை சொல்லி தந்த குடும்பமோ...

பார்க்கும் அனைத்திலும், அந்த குழந்தை அதன் வீட்டின் ஏழ்மை நிலையை கண்டதோ??

சே.குமார் said...

ஒண்ணுமே சொல்ல முடியல ...

சந்தனமுல்லை said...

:-( என்ன சொல்றதுன்னு தெரியலை....ஒரு தடவை காலேஜ் ஃபீஸ் கட்டறதுக்கு அம்மா செயினை அடகு வைச்சது ஞாபகத்துக்கு வருது!

ponraj said...

இதுதான் குழந்தை மனசு!!!

Anonymous said...

Free Google Adsense Training In coimbaotre Tamilnadu India
Free Web Design Training In coimbaotre Tamilnadu India
Free SEO Training In coimbaotre Tamilnadu India

Deepa said...

:((

Sriakila said...

//அந்தக் காட்சிக்கான அவளது புரிதல் புரிந்த போது..., எனக்கு சிரிப்பு

வரவில்லை//


அவளது புரிதலில் ஏற்படுத்திய வலியில் என்னாலும் சிரிக்க முடியவில்லை.