Monday, August 23, 2010

எங்கள்அன்புத்தம்பி...

.

.`எக்கோவ்’ என பாசமாக, `ஏ புள்ள’ என செல்லமாக, அழைக்கும்

அன்புக்குரல் காணாமல் போய் ஐந்து வருடங்களாகின்றன. அற்புதமான

ஓவியன், அருமையான பாடகன், இனிய நண்பன், எங்களுக்கு செல்ல

தம்பி.



என் அக்காவின் மகன் இப்படித்தான் இருப்பான் என பையனை

பார்க்க வரும்போது, கற்பனையில் வரைந்து கொணர்ந்த ஓவியம் கண்முன்

சிரிக்கிறது. அழகாக பாட, ரசித்துக் கேட்டிருந்த காதல்ஓவியம் பட பாடல்கள்

கண்ணீரை வரவழைக்கிறது. எத்தனையோ நினைவுகள் பசுமையாய்....



ஜுலை18 அன்று என் தம்பியின் மகள், `அத்தை, இன்று என் டாடியின்

பிறந்தநாள், என எஸ் எம் எஸ் அனுப்பிய போது ஆறுதல் கூற வார்த்தை

இல்லாமல் கலங்கிப் போனேன்.



தம்பி, விமானப்படையில் சேர்ந்து, பெங்களூரில் டிரெய்னிங் முடித்ததும்,

அவனுக்கு பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் முதல் போஸ்டிங். போய்

சேர்ந்ததும் எழுதிய முதல் கடிதத்தில்` இந்தியா மேப்‘ வரைந்து, அதில்

ஆறுமுகனேரியையும், பஞ்சாபையும் குறித்து, `நீங்கள் அங்கே இருக்

கிறீர்கள், நான் மட்டும் இவ்வளவு தூரத்தில் இருக்கிறேன்’ என்று எழுதியி

ருந்தான். இப்போது எங்களை தவிக்க விட்டு தொலைதூரம் பறந்து

விட்டான்.



காலம் எல்லாவற்றையும் ஆற்றும், மாற்றும் என்பார்கள். நினைத்த

மாத்திரத்தில் விழி நிறையும் நீரும், நெஞ்சை அடைக்கும் பெருமூச்சும்

மாறவே யில்லை.

.

34 comments:

எல் கே said...

ungalukku aaruthal koora vaarthaigal illai

வினோ said...

வார்த்தைகள் இல்லை சகோ... கண்ணீர் துளிகள் மட்டுமே...

ponraj said...

மௌனம் மட்டுமே..........!!

வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு!!!

நினைவுகள் மட்டுமே....!!

என்றும் மறவா ............!!

saarun said...

காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும்....
என்கிற நம்பிக்கையோடிருங்கள்

saarun said...

kaalam ellaak kaayangkalyum aatrum

Anonymous said...

kaalam ellaak kaayangkaliyum aatrum

சாருன் said...

kaalam ellak kaayangkalaiyum aatrum....

VijayaRaj J.P said...

ஒருநாள் அவனை மறந்திருப்பேன்...
அன்று நானும் இறந்திருப்பேன்.

Anonymous said...

kaalam kaayangkalai aatrum
nampikkayodirungkal

சாருன் said...

kaalam kaayangkalai aatrum
nampikkayodirungkal

VELU.G said...

பிரிவு என்றும் வலிதான்

Deepa said...

ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை அக்கா.
அஞ்சலிகள்.

Priya said...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை... தைரியமாக இருங்கள்.

கலக்கத்தை கரைய‌ வைக்கும் காலம், என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.

பத்மா said...

romba sorryma ...kashtama irukku

ஹேமா said...

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை அம்பிகா.

அன்பரசன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்..

பா.ராஜாராம் said...

மாது தளத்திலும் வாசித்து அறிந்தேன். ஒன்னும் சொல்ல முடியல அம்பிகா.

அஞ்சலிகள்.

அன்புடன் அருணா said...

அஞ்சலிகள்.

செ.சரவணக்குமார் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை அக்கா. படித்ததும் கண்கள் நிறைகின்றன.

எனது அஞ்சலிகள்.

காமராஜ் said...

இந்தியா மேப்‘ வரைந்து, அதில்

//ஆறுமுகனேரியையும், பஞ்சாபையும் குறித்து, `நீங்கள் அங்கே இருக்

கிறீர்கள், நான் மட்டும் இவ்வளவு தூரத்தில் இருக்கிறேன்’ என்று எழுதியி

ருந்தான். இப்போது எங்களை தவிக்க விட்டு தொலைதூரம் பறந்து

விட்டான்.//கலங்கடிக்கிற நினைவுகள்.

Chitra said...

I am so sorry to hear the news. I pray for the peace and comfort of your family.

ராஜவம்சம் said...

நீங்கள் நினைக்கும் வரை அவர் உயிர்வாழ்கிறார் உங்கள் உணர்வுகளோடு

மறக்கும்போதுதான் உண்மையானமரணம்.

உங்கள் வலியில் பங்குகொள்ளும் சகோ.

அ.முத்து பிரகாஷ் said...

உங்கள் உணர்வுகளில் பங்கு கொள்கிறேன் தோழர் !

Gokul Rajesh said...

I miss him too...

'பரிவை' சே.குமார் said...

உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி....
மௌனம் மட்டுமே மனதுக்குள் கண்ணீர் விடுகிறது.

சந்தனமுல்லை said...

thangaludan varuththathai pagirnthu kolgiren, akka. :-((

venu's pathivukal said...

அன்பு அம்பிகா அவர்களுக்கு

இன்று காலையில் தான் மாதவ் வலைப்பூவில் உங்களது தம்பியின் நினைவுக் குறிப்புகளை வாசித்து சோகத்தில் ஆழ்ந்தேன்.

கலை நேசர்கள் எப்பொழுதும் மனித நேயர்களாகவும், தம்முள் ஆழமான கருத்தோட்டங்களைக் கொண்டவர்களாகவும் இருப்பர் என்று நான் நம்புவதுண்டு. உங்களது அருமையான குடும்பச் சோலையில் பூத்த ஓர் அற்புத மலர் அத்தனை சீக்கிரம் உதிர்ந்துவிட்டது அவரை நேரடியாக அறியாத என்னைப் போன்றோருக்கே வேதனையையும் வலையையும் ஊட்டுகிறது என்றால், உங்களது குடும்பத்தாரின் நிலையை என்ன சொல்ல....
ஏனோ, உங்களது அருமைத் தாயின் நினைவுகளும் இன்று வந்து பற்றிக் கொண்டன. அவரையும் நான் நேரடியாக அறிந்திருக்க வில்லை...மாதவின் எழுத்துக்களே அறிமுகப்படுத்தியவை...

வண்ணங்களோடு இழைந்து, குழைந்து இயங்கிய பல்கலை வாணனுக்கு எனது நெஞ்சு நெகிழ்ந்த அஞ்சலி..

எஸ் வி வேணுகோபாலன்

பவள சங்கரி said...

காலம்தான் இதற்கு சிறந்த மருந்து. மனதை அமைதிப் படுத்திக் கொள்ளுங்கள் சகோதரி.

சாந்தி மாரியப்பன் said...

சில காயங்களை காலமும் கண்ணீரும்கூட ஆற்றமுடியாது, என்றாலும் பிரார்த்திக்கிறேன்..

நேசமித்ரன் said...

எனது அஞ்சலிகள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

வார்த்தைகளின்றி கண்ணீர் அஞ்சலிகள். உங்க தம்பி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

இழப்பின் வலி கொடியது. உங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்க என் பிரார்த்தனைகள்.

மங்குனி அமைச்சர் said...

மனதை தேற்றிக் கொள்ளுங்கள்

R.Gopi said...

அம்பிகா

இழப்பு என்றுமே மனிதனுக்கு கொடிது..

எதை அடைந்தாலும் ஆனந்தம் கொள்வதும், இழந்தாலும் துன்பம் கொள்வது மனித இயல்பு...

ஆயினும், வாழ்க்கையே ஒன்றை இழந்து மற்றொன்றை பெறுவது தானே....

சாருன் சொன்னது போல் :

காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்.... என்கிற நம்பிக்கையோடு இருங்கள்...

அந்த கடவுள் உங்களுக்கு எப்போதும் துணையிருக்கட்டும்....