.
`.என்ன வலி அழகே’ என சகோதரி முல்லை, ஒரு வாடிக்கையாளராக
தன் அழகுநிலைய அனுபவங்களை நகைச்சுவையாக எழுதி இருந்தார்.
அவரது கருத்தில், ஒரு அழகுக் கலை நிபுணராக நான் முரண் படுவதால்,
இந்த பதிவு.
அழகாகத் தோன்ற வேண்டும் என்ற எண்ணம், ஆண், பெண் இருவருக்
குமே பொதுவானது. வேண்டுமானால் பெண்களிடம் கொஞ்சம் கூடுதலாக
இருக்கலாம். புறஅழகுக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும் எனும்
கேள்வி எழலாம். அக அழகை வெளிப்படுத்தவும் புறஅழகு தேவையே.
பார்த்த மாத்திரத்தில் மனதில் பதிவது புறத் தோற்றமே! எனக்கு புறஅழகு
முக்கியமில்லை, இயல்பாக இருப்பதையே விரும்புவேன் என்பவர்கள் கூட
ஏதோ ஒரு வகையில் புறத்தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ளத்தான்
செய்கின்றனர்.
அழகுப்படுத்திக் கொள்ளுதல் என்பது இப்போதில்லை, பழங்காலத்திலே
இருந்திருக்கிறது. சருமம் பளபளக்க கழுதைப்பாலில் ஒரு அரசி குளித்
தாளாம். ஆயக்கலைகள் 64ல் ஒப்பனைக் கலையும் உண்டு என படித்த
நினைவில் பார்த்தால், ` முகஒப்பனை, முடிக்கு சாயம் தடவுதல், உடை
களுக்கேற்ப நகைஅலங்காரம் என தனித்தனியாக நான்கு வகைக்கலைகள்
இடம் பெற்றிருந்தது ஆச்சர்யப் படுத்தியது.
அழகுநிலையம் செல்வதென்பது வெறுமனே அலங்காரம் செய்து கொள்ள
என தவறாக எண்ணுகின்றனர். நம்மிடம் இருக்கும் சிற்சில குறைகளை
நிவர்த்தி செய்து கொள்ளவும் தான். மேல்நாட்டு பெண்கள் போல முடிக்கு
சாயம் தடவிக்கொள்ளுதல் போன்ற சிலவற்றை வேண்டுமெனில் ஆடம்பர
மாக கருதலாம். ஆனால் சில அடிப்படை தேவைகளுக்காக செல்வோரின்
எண்ணிக்கை மிக அதிகம்.
முதலில் `வாக்ஸிங்’ பற்றி பார்ப்போம். கை கால்கள், முகம் போன்ற
வற்றில் வளரும் முடிகளை நீக்க வாக்ஸிங் செய்யப் படுகின்றது. ஹேர்
ரிமூவர் க்ரீம்கள் பயன் படுத்தினால் ஒரே வாரத்தில் வளர்ந்து விடும்
என்பதாலும், அதில் உள்ள ரசாயனங்கள் பலருக்கு `அலர்ஜி’ ஏற்படுத்து
கின்றன என்பதாலும் இதை நாடுகின்றனர். கைகால்களில் நீக்குவ
தென்பது வேண்டுமெனில் அவரவர் விருப்பத்தை பொறுத்து அமையலாம்.
ஆனால் மேலுதட்டில், நாடியில், இலேசாக அல்ல, பளிச்சென்று தெரியும்
அளவுக்கு சிலருக்கு முடி வளர்கின்றது. மரபு ரீதியாகவோ, அல்லது
ஹார்மோன் குறைபாட்டினாலோ இப்போது பல பெண்களிடம் இந்த
குறைபாடு காணப் படுகின்றது. பொதுவிடங்களில் பிறரின் கேலிப்
பார்வைக்கும், குத்தல் பேச்சுக்கும் ஆளாகும் இவர்கள் மிக மோசமாக
தாழ்வு மனப்பான்மை அடைகிறார்கள். இவர்களூக்கு வாக்ஸிங் அவசிய
மானதாகி விடுகிறது. நான் இயல்பாகத் தான் இருப்பேன் என நிச்சயம்
இந்த பரிதாபத்துக்குரியவர்களால் வாதம் செய்ய முடியாது.
சாதாரணமான சருமம் கொண்டவர்களுக்கு ஃபேஷியல் தேவையில்லாமல்
இருக்கலாம். ஆனால் எண்ணெய் வழியும் முகமும், சொரசொரப்பாக
வொயிட் ஹெட்ஸ், ப்ளாக் ஹெட்ஸ் போன்றவையும், பெரிய பெரிய
பருக்களும் நிறைந்த முகம் பெற்றவர்களுக்கு `அரோமா ஃபேஷியலோ,
ஹெர்பல் ஃபேஷியலோ, ஒரு மருத்துவமாக தேவைப் படுகின்றது.
சரியான முறையில் செய்யப் படும் ஃபேஷியல் மஸாஜ் தூக்கம் வருவது
போல சுகமாகத் தான் இருக்கும். `ப்ளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ்
நீக்குவது தான் வலி தரும். ஆனால் தாங்க முடிந்த அளவில் தான்.
மருத்துவரிடம் ஊசி போட்டுக் கொள்வதில்லையா அதுபோல. ஆனால்
உரித்த கோழி உதாரணம் எல்லாம் மிக அதிகம். (முல்லை இதை
நகைச்சுவைக்காகத் தான் சொல்லியிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் ).
புருவம் திருத்திக் கொள்வதென்பது இப்போதெல்லாம் மிகமிக சாதாரண
விஷயமாகி விட்டது. சரியான அளவில், அல்லது கொஞ்சம் சுமாராக
அமைய பெற்றவர்கள் அதை அநாவசியம் என நினைக்கலாம். ஆனால்
அதுவே அதிகமாக பாதி நெற்றியை மறைக்கும் அளவுக்கு இருந்தால்
அவசியமாகி விடுகிறது.. முதலில் ஓரிரு முறை வலி தெரியும்.
தொடர்ந்து செய்யும் போது வலி மிக சாதரணமாகி விடும். ஐந்து
அல்லது பத்து நிமிடங்களில் திருத்திக் கொள்ளலாம் .எட்டாவது,
ஒன்பதாவது படிக்கும் பெண்கள் கூட வருகிறார்கள். +2, அல்லது
காலேஜ் படிக்கும் போது வாருங்கள் என துரத்த வேண்டியருக்கிறது.
.
.
ஒருமுறை, பக்கத்தில், ஒரு குக்கிராமத்தில் இருந்து ஒருப் பெண்ணை
அவள் தாயார் அழைத்து வந்திருந்தார். வயலில் வேலை செய்பவர்கள்.
அவர்கள். அந்த பெண்ணுக்கு திருமணம் பேசிவைத்திருப்பதாகவும்,
பெண்ணைப் பார்த்து சரியென்று விட்டால் உடனே திருமணம் என்றும்
கூறினார். அத்தனை அடர்த்தியான, புருவத்தை நான் பார்த்ததே
இல்லை. சுமார் 1 1/2 இஞ்ச் அகலத்தில் நெற்றிதெரியாதபடி வளர்ந்
திருந்தது. படத்தில் இருப்பதை விடவும் இரண்டு அல்லது மூன்று
மடங்கு இருக்கும். சரிசெய்யும் போது முகச்சுழிப்போ, சிணுங்கலோ
அவளிடம் இல்லை. சரி செய்யப்பட்டபின் பெண்ணின் முகத்தைப்
பார்த்த அம்மா சந்தோஷத்தில், ` நீ நல்லாயிருக்கணும் மா’ என்று
வாழ்த்திய வார்த்தைகளில் அந்த தாயின் வலி வெளிப்பட்டது.
அவளுக்கு திருமணம் முடிவாகி, திருமணத்துக்கு முன்னரும் வந்து
புருவம் திருத்திக் கொண்டது, கூடுதல் சந்தோஷம்...
இப்போதெல்லாம் பெண்கள் அதிக அளவில் வேலைக்கு செல்கின்றனர்.
அதனால் அதிக அளவு தம் தோற்றத்தில் அக்கறை எடுத்து கொள்
கின்றனர். கணவர் அல்லது நண்பரின் வற்புறுத்தலுக்காக அழகு
நிலையம் செல்வதாக கூறும் பெண்கள் மிக சொற்பமே! `அவர் மட்டும்
தலைக்கு, மீசைக்கு டை அடித்து கொள்கிறார்., என்னை பார்லருக்கு
அனுப்ப மாட்டேங்குறார்’ என்னும் பெண்கள் தாம் அதிகம்.
ஒரு ஆண் இண்டர்வியூ க்கு செல்லும் போது, முடி வெட்டி, `ஷேவ்’
செய்து, திருத்தமான உடை உடுத்தி போவதில்லையா? என்னிடம்
நிறைய திறமைகள் இருக்கின்றன, நான இயல்பாகத்தான் இருப்பேன்
என கலைந்த ஆடைகளுடன், சவரம் செய்யாத முகத்துடன் சென்றால்
என்ன நடக்கும்? பல சமயங்களில் புறத் தோற்றமும், மிக மிக
அவசியமே! `ஏன் ஷேவ் பண்ணிக்கலை’ என்று ஆணிடம் கேடபதைப்
போல ஏன் `ஐ ப்ரோ பண்ணிக்கலை’ என பெண்ணிடம் கேட்கும் காலம்
விரைவில் வரலாம்.
இன்னும் நிறைய குறிப்பிடலாம். பதிவு ஏற்கனவே பெரிதாகி விட்டது.
.
19 comments:
போட்டு தாக்கு.. நல்லா இருக்கு சகோ உங்க கேள்வி.. என் மனைவியிடம் நாளை கேட்கிறேன்.. :)
இல்வாழ்க்கைக்கும் இனப் பெருக்கத்திற்கும் அலங்காரம் அவசியமே.
மழித்தலும் நீட்டலும் வேண்டா என்பது ஆசை துறந்தவர்களுக்கு
ம்ம்...உண்மைதான்.
தேவையான ஒன்று.
முல்லையின் கட்டுரையும் வாசித்தேன்.
இங்கு, veri good சொல்ல தோன்றுகிறது.
// பல சமயங்களில் புறத் தோற்றமும், மிக மிக அவசியமே!//
கரெக்டா சொன்னீங்க.. எங்கூர்லயும் குறைந்தபட்சம் ஐப்ரோ செஞ்சுக்காதவங்களே கிடையாது.
நம்மூரைப்பொறுத்தவரை இதெல்லாம் வேண்டாத செலவுகள். அதான் சாக்குப்போக்காக, இயல்பான அழகுதான் அழகுன்னெல்லாம் சொல்றது. இது என்னுடைய ஊகம் மட்டுமே :-)).
கரெக்ட்டாச் சொன்னீங்க..
அழகுப்படுத்திக் கொள்ளுதல் என்பது இப்போதில்லை, பழங்காலத்திலே
இருந்திருக்கிறது. சருமம் பளபளக்க கழுதைப்பாலில் ஒரு அரசி குளித்தாளாம்
//
இந்த அரசி வேறு யாருமில்லை.. இன்றளவும் பேச்சு வழக்கில் இருக்கும் பேரழகி கிளியோபட்ரா.. இந்த பேரழகிக்க்காக நாடுகளை இழந்து உயிரையும் பறிகொடுத்தவர்கள் ஏராளம்..
வலி என்பது எனக்கு மிகப்பெரிய பயம் அம்பிகா. தாங்கக்கூடிய அளவென்றாலுமே கூட..
என் மகள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் ஸ்கர்ட் தான் அணியவேண்டும் அவள் கால்களை வாக்ஸிங் செய்யவேண்டியது அவசியம்தானா என்று எனக்குத்தெரியவில்லை. நான் முழுபாவாடை அணிந்து மூடிக்கொள்ளும் வரை தேவைப்படாத ஒன்று என்பதால் எனக்கு புரியவில்லை. அவளே தோழிகளின் அறிவுரைப்படி என்றேனும் கேட்கலாம். புருவம் பற்றியும் கூட நீங்கள் சொல்வது சரியோ என்றூ இப்போது தோன்றுகிறது. எனக்கு செய்யாமலே நன்றாக இருப்பதால் தான் அப்படி சொல்லி இருப்பேனோ என்று.. ஒரு நாணயத்தின் இருவேறு பக்கங்களை இருவருமே காட்டி இருக்கிறீர்கள்.. எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் சரியானதாக இருக்கமுடியாது என்பது உண்மை தான். தேவையான ஒன்றை , கையிருப்புக்கேற்ற வகையில் செலவு செய்து அலங்கரித்துக்கொள்ள வேண்டியது தான்.
அடிச்சு ஆடிட்டாங்கய்யா அம்பிகா அக்கா!
என்னா சவுண்டு?
நம்ம அதிரடி ஆச்சி என்ன சொல்றாங்கன்னு கேப்போம்...
முல்லைஐ.... வாங்கம்மா!
(சாலமன் பாப்பையா குரலில் படிக்கவும்)
மீ த க்ரேட் எஸ்கேப் :))
New area......!!!!!
so, Present, Mam!
உங்க தரப்பை அழகாய்த் தெளிவாய் தன்மையா எடுத்துச் சொல்லி விளக்கியிருக்கீங்க.
//மரபு ரீதியாகவோ, அல்லது
ஹார்மோன் குறைபாட்டினாலோ//
இவர்களுக்கான சிகிச்சை கிட்டாதபோதோ, அல்லது பக்கவிளைவுகள் தருவனவாக இருந்தாலோ அல்லது அதிகச் செலவுபிடிப்பதாகவும் இருக்கும் வகையில், அழகு நிலையங்கள்தான் தீர்வு!!
அழகாயிருத்தல் அவசியம்னு அழகா எடுத்துச் சொல்லியிருக்கீங்க அம்பிகா.
அழகுநிலையம் செல்ல விருப்பப்படாதவங்ககூட இப்ப வீட்டிலேயே
ஐ ப்ரோ, ஃபேஷியல் எல்லாம் செய்துகொள்ளத்தான்செய்கிறார்கள்.
சந்தனமுல்லையின் பதிவு
நகைச்சுவையாக இருந்தது.
அம்பிகாவின் பதிவு
ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது.
மருத்துவ ரீதியாகத் தீர்வு செய்து கொள்ள பார்லர்கள் வழிவகுப்பது உண்மைதான் அம்பிகா. சிலருக்கு தேவையும் கூட. ஆனால் புருவங்கள் ஓரளவு திருத்தமாகவே இருப்பினும் திருத்திக் கொண்டாலே திருப்தி என்றிருப்பது.. அவரவர் விருப்பமே:)! மற்றவர் வற்புறுத்தலுக்காக பார்லர் செல்பவர் மிகச் சொற்பம் என்பதில் உடன்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை பார்லரில் நேரத்தை செலவிடும் பொறுமை சுத்தமாகக் கிடையாது. ஆகையால் வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்ளவதே வழக்கமாகி விட்டது. புற அழகு மனதை உற்சாகமாய் வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தும் கிடையாது.
//அவளுக்கு திருமணம் முடிவாகி, திருமணத்துக்கு முன்னரும் வந்து
புருவம் திருத்திக் கொண்டது, கூடுதல் சந்தோஷம்...//
நல்ல விஷயம். ஆனால் வயலில் வேலைபார்க்கும் பொருளாதார வசதி குறைந்த குடும்பத்தில், புகுந்த இடத்தில், தொடர்ந்து பார்லருக்கு அனுப்புவார்களா எனும் கேள்வியும், அடர்ந்த புருவங்களுடனான தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் அப்பெண்ணின் அக அழகினை மதித்து நடத்த வேண்டுமே எனும் ஆதங்கமும் கூடவே வருகிறது.
உங்க தரப்பை அழகா சொல்லியிருக்கீங்க.
புற அழகை விரும்பாதவர்கள் யாருங்க.. நல்ல பதிவு
100% சதவீதம் உண்மை அம்பிகா
நான் இதுவரை பார்லர் சென்றதில்லை. பார்லரைப் பற்றிய எனது கருத்து வேறாக இருந்தது. உங்கள் கட்டுரையைப் படிக்கும்போது அனைத்தும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது.
langley afb pharmacy http://exclusiverx.com/products/lasuna.htm fliefawlivale 4058553 eckerts pharmacy
Post a Comment