சுவர்களை  புதிது புதிதாக பூக்கள்,  படங்கள் அலங்கரிக்கின்றன.  பழைய காலண்டர்கள் குப்பையில் எறியப் படுகின்றன. கடந்த வருடத்தின்  நனவாகாத கனவுகளும், கவலைகளும் கூட.   தொலைவில் வெடிச்சத்தங்கள்,  புத்தாண்டை வரவேற்க மக்கள்  தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.  அனைத்து ஆலயங்களிலும்  விசேஷ  பூஜைகள்,  அனைத்து பத்திரிகைகளிலும் புதுவருட ராசிபலன்கள், அனைத்து டிவி சேனல்களிலும் இனிய புத்தாண்டே,  என சிறப்பு ஒளிபரப்புகள்,  பெருநகர்களில் பார்ட்டிகள், விருந்துகள்  என வழக்கமான ஆரவாரங்களுடன் புத்தாண்டு மலர்கிறது.
            கடந்து  வந்த பாதையின் சுவடுகள் மறையத் தொடங்குகின்றன. நிறை,  குறைகள்  சிந்திக்கவைக்கின்றன.  நிறைகள் கண்களுக்கு புலப்படுகின்றன. குறைகள் கருத்துக்கு  மட்டுமே தெரிகின்றன. களைய முயல்வோம்.
             இதோ முடியும் இவ்வாண்டின் இறுதியில் தான்  வலையுலகில் பிரவேசித்தேன்.
தளர்நடை பழகி ஐந்து எட்டுகள்  தான்  வைத்திருக்கிறேன். அதற்குள், எத்தனை வரவேற்புகள்
வாழ்த்துகள்,  பாராட்டுக்கள்....  இத்தனைக்கும்  தகுதியானவள்தானா தெரியவில்லை.  ஆனால்  தகுதியை  வளர்த்துக் கொள்ள முடியும் என ந்ம்பிக்கை இருக்கிறது. அன்பின் எல்லை  விரிந்து கொண்டேப் போகிறது.
                கண்ணுக்கு தென்படாமல்,   மனதை மயக்கும்  மனோரஞ்சித  மலரின்  நறுமணமாக,   முகமறியா,   தொலைதூரங்களிலிருந்து வாழ்த்தும்  அன்பு நெஞ்சங்களின்  நேசம்  நெகிழச்  செய்கிறது. இந்த  புத்தாண்டு   அனைத்து மனதின் ஆசைமலர்களையும் மலர செய்வதாக  அமையட்டும்.  அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
11 comments:
இத்தனைக்கும் தகுதியானவள்தானா”
எங்களுக்கும் தெரியாது.. ஆனால்
நம்பிக்கை இருக்கிறது.
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள், அண்ணாமலையான்.
//இந்த புத்தாண்டு அனைத்து மனதின் ஆசைமலர்களையும் மலர செய்வதாக அமையட்டும்.//
அவ்வாறே அமையட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா!
புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்..!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என் தங்கையே!
புத்தாண்டு வாழ்த்துகள் தோழி. :-)
//ஆனால் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியும் என ந்ம்பிக்கை இருக்கிறது//
இந்த நம்பிக்கைத்தான் முக்கியம். வளர்க உங்களின் எழுத்துப்பணியும். நானும் வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள்.
அம்பிகா.
இது மூன்றாவது பதிவெனத்தொன்றவில்லை.
மிகத்தேர்ந்த எழுத்தின் ருசி தூக்கலாகத்தெரிகிறது.
சந்தோசமாக இருக்கிறது.
தொடரட்டும் இன்னொரு எழுத்து.
மோகனுக்கும் குழந்தைகளுக்கும் என் அன்பும் வணக்கமும்.
ராமலஷ்மி,
தீபா,
பிரியமுடன் வசந்த்,
மாது அண்ணா,
ரோஸ்விக்,
பாலாசி,
காமராஜ் அண்ணா,
அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அப்படியே மாதவனிடமிருந்து சொட்டுகிறது வாழ்த்து சொல்லும் அழகும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்பிகா!
Post a Comment