Monday, May 3, 2010

ஆப்ரஹாம் மாமா.

.
.
ஊர்க்கோயிலில் கொடை திருவிழா. இந்த மாரியம்மன் திருவிழா இங்கு

மிக பிரசித்தம். ஏழுநாட்கள் நடைபெறும். ஊரேகளை கட்டியிருக்கிறது.

தெருதோறும் `லவுட்ஸ்பீக்கர்’ அலறிக் கொண்டிருக்கிறது. வெளியூரில்

இருக்கும் அத்தனை உறவினர்களும் இந்த திருவிழாவிற்கு ஆஜராகி

விடுவர். எங்கள் வீட்டிலும் அப்படியே!. நேற்று பேசிக்கொண்டிருக்கும்

போது இடையில் ஆப்ரஹாம் மாமாவின் பேச்சு வந்தது.



ஆப்ரஹாம் மாமா என்பது அம்மாவின் பெரியம்மா மகன். அவர்கள் இருக்

கும் இடமே கலகலக்கும். சிரிக்க சிரிக்கப் பேசி எல்லோரையும் சந்தோஷ

மாக வைத்திருக்கும் மாமாவுக்கு எட்டு குழந்தைகள். குழந்தைகளை பேர்

சொல்லி கூப்பிடாமல், நம்பர் 1, 2 என்றே கூப்பிடுவாரகள். பேர ஞாபகம்

வைக்க முடியல என்று ஜாலியாக சொல்வார்கள். நாங்கள் சிறுவர்களாய்

இருந்த போது அவர்கள் உள்ளூரில் தான் இருந்தார்கள். எங்களிடம் மிகவும்

அன்பாயிருப்பார்கள். அசராமல் ஜோக் அடிக்கும் வித்தையை அவர்களிடம்

தான் கற்று கொள்ள வேண்டும். திருக்குறளை மாற்றி புதுக்குறள் நிறைய

சொல்வார்கள். அதில் ஒன்று இன்னும் நினைவிருக்கிறது.


`கடலை வறுக்க, வறுத்ததை, வறுத்தவன்,

வறுத்த உடனே உண்க.’


எல்லோரையும் சிரிக்கவைத்த அவர்கள் வாழ்வில் அத்தனை சிரிப்பு

மில்லை; சிறப்புமில்லை. வெகுளியாய், அன்பாய் மனங்களை சம்

பாதித்த அவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எளிதாயில்லை. குடும்பத்தின்

அன்றாட தேவைகளுக்கே போராட வேண்டியிருந்தது. குடும்பத்தோடு

சென்னைக்கு புலம் பெயர்ந்தனர். ஏதேதோ தொழில் செய்தார்கள். ஒரு

பல்பொடி கம்பெனியின் விற்பனை பிரதிநிதியாய் ஒருமுறை வேனில்

வந்தார்கள். கோபால் பல்பொடி போல் ஏதோ ஒரு பல்பொடி. அம்மாவி

டம் கட்டு கட்டாக அள்ளி கொடுக்கவும், அம்மா,` குழந்தைகள் இதில்

பல் துலக்க மாட்டார்கள்’ என மறுத்தார்கள். `உங்களை யார் பல் துலக்க

சொன்னது, பாத்திரம் துலக்க வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள், சாதா

ரணமாக.



நாளடைவில் அவர்கள் ஊருக்கு வருவது குறைந்து போயிற்று. ஆனால்,

திருமணம் போன்ற முக்கியமான வைபவங்களுக்கு தவறாமல் வந்து விடு

வார்கள். ஒருமுறை வரும் போது, `மாமா இப்போ நல்லா யிருக்கேன்.

சொந்த வீடெல்லாம் வாங்கி விட்டேன். அடுத்த முறை சென்னை வரும்

போது கண்டிப்பாக வீட்டிற்கு வரவேண்டும் என கூறிச் சென்றார்கள்.



இரண்டு வருடங்களுக்கு முன், இதே கோயில் திருவிழாவுக்கு வந்திருந்

தார்கள். மாது அண்ணனும் அந்த வருடம் வந்திருந்தான். சந்தோஷமாக,

உற்சாகமாக, எல்லோருடனும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்க

ளுக்கு எப்பவும் `தீர்த்தமாடும்’ பழக்கம் உண்டு. நன்றாக ஏற்றிவிட்டு,

எங்களிடம், `அத்தையை தவிர யாரையும் பார்த்ததே இல்லை, நாளை

போகும் போது யாரையாவது கூட்டிட்டு தான் போவேன், இந்த நரைமுடி

ஒண்ணு தான் பிரச்சனை. எனக்கு டை அடிச்சு வுட்டுறு’ என உற்சாக

மிகுதியில் புலம்ப எல்லோரும் சிரித்தோம். காலையில், `என்ன மாமா,

டை அடிச்சுறுவோமா’ எனவும், `அய்யய்யோ, அத்தை கொன்னே

போட்டுறுவா’ என்றார்கள். மாலை கிளம்பும் போது, மாது அண்ணனின்

கைகளை பிடித்து கொண்டு, `ரொம்ப சந்தோஷமாய் இருந்தேன் ப்பூ,

இனி ஒவ்வொரு வருஷமும் கோயில் கொடைக்கு வந்துருவேன்’ என்று

விடை பெற்று சென்றார்கள்.



சரியாக இரண்டே மாதங்கள். சென்னையில் இருந்த இன்னொரு மாமா

விடம் இருந்து போன், ` ஆப்ரஹாம் மாமாவுக்கு ரத்தகொதிப்பு அதிக

மாகி, சீரியஸ் கன்டிஷனில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்ப

தாக’. அன்று இரவே மாமா இறந்து போனார்கள். அதிர்ந்து போனோம்

அனைவரும். என்அம்மா, `காலனை தோளில் வைத்து கொண்டு தான்

வந்தான் போல’ என அரற்றிக் கொண்டிருந்தார்கள். ஒருவருடமும் வராத

மாமா கடைசி விடை பெறுவதற்காக, அவர்கள் அன்பை நாங்கள்

நினைத்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் வந்தார்களோ

என நினைக்க தோன்றுகிறது. இனி வரும் அத்தனை கோயில்கொடை

யிலும் மாமாவின் நினைவுகள், எங்களிடையே மலர்ந்து மணம் வீசும்...
.
.

17 comments:

க ரா said...

உருக்கமான பதிவு.

நேசமித்ரன் said...

அழகா எழுதி இருக்கீங்க.

Chitra said...

நெகிழ வைத்து விட்டீர்கள்......!!!

ஹேமா said...

அம்பிகா கண் கலங்கிவிட்டேன்.
உறவுகள் ..பெருமூச்சுமட்டுமே !எனக்கும் ஒரு மாமா மோட்டார் சைக்கிள் விபத்தில் இளவயதில் எங்களை விட்டுப் போனார்.
அவரையும் நினைத்துக்கொண்டேன்.
வாழ்வு புதிர் தோழி !

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான பகிர்வு.

மாதவராஜ் said...

படித்து முடிக்க சிரமமாயிருந்தது. பொங்கிக்கொண்டு வருகிறது அழுகை.

சிரித்துக்கொண்டே வாழ்க்கையோடு மல்லுக் கட்டுவது என்பது லேசில் வாய்க்காது. ஆபிரஹாம் மாமா அபூர்வ மனிதர்.

அந்தக் கடைசி வருடம் என்ன கிண்டலும், கேலியும்! நினைவுகள் அலைக்கழிக்கின்றன.

AkashSankar said...

பல குடும்பங்களில் இதுபோன்று ஒருவர் கண்டிப்பாக இருப்பார்... ஆனால் முடிவு சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

ponraj said...

உங்கள் பதிவு மிக அருமை!!

ஒரு முறை பெரியப்பா அவர்கள் திருமணவிழாவில் நல்ல தண்ணியில் இருந்தார்கள், அவர்களிடம் கேட்டேன் ஏன் இப்படி தண்ணி அடிக்கிஙக்? அதற்கு அவர் சொன்ன பதில் வியப்பை தந்தது " இயேசு நாதர் முதல் அதிசயமாக,காணா ஊர் கல்யாணத்தில் திராட்சரசம் பட்றாகுறை வந்தது, அதனால் தண்ணிரை திராட்சரசமாக மாற்றினார்" என்று கூறினார்.அப்போதே மக்கள் தண்ணி அடித்தார்கள், அதனால் தண்ணி அடிப்பது தப்பு இல்லை என்றார்.
அப்படி பட்ட பெரியப்பா இந்த கோயில் விழாவில் இல்லை என்று நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கு!!

INDIA 2121 said...

அழகா எழுதி இருக்கீங்க
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com

Henry J said...

very nice.....


Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips

VijayaRaj J.P said...

ஆப்ரஹாம் மாமா..
ஆறடிக்கும் கூடுதலான உயரம்,
ஆஜானுபாகுவான தோற்றம்,
கம்பீரமான குரல்.

தோற்றத்துக்கு தொடர்பில்லாத பேச்சு,
நகைச்சுவையால் மாமா இருக்கும் இடமே
கிடுகிடுக்கும்.

கம்பீரமான ஆப்ரஹாம் மாமா
என்னுடன் வேட்டைக்கு
வந்து இருக்கிறார்கள்."அதை அடி-இதை அடி"
என்று உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.

1978-ல் பஸ்சுக்காக காத்து நின்றபோது
அந்த வழியாக வந்த ஒரு கட்சியின்
பிரசார வேனில் ஏறி அடுத்த ஊரில்
இறங்கினோம்.கடந்த சில ஆண்டுகளுக்கு
முன்பு அந்த சம்பவத்தை ஒரு மத்திய
மந்திரியுடன் ஒப்பிட்டு''அவர் இப்போதுதான்
அரசியலுக்கு வந்தவர் ஆனால் நாங்கள்
30ஆண்டுகளுக்கு முன்பே வேனில் ஏறி
பிரசாரம் செய்து இருக்கிறோம்'என்று கூறி
அதிர செய்தார்கள்.

எவ்வளவு ஜாலியாக பேசினாலும்
அவர்கள் பேச்சு யாரையும்
புண்படுத்தாது.மனம் முழுவதும்
அன்பும்,பாசமும் நிறைந்தவர்கள்.

அவர்களை பற்றியும் எத்தனை
நாட்களும் பேசிக்கொண்டே
இருக்கலாம்.

நினைவுகளை கிளறும் பதிவு.

ஹுஸைனம்மா said...

ஆப்ரஹாம் மாமா போல எல்லாருக்கும் யாராவது ஒருவர் நினைவுக்கு வருவார். நெகிழ வைக்கிறது பதிவு.

'பரிவை' சே.குமார் said...

அம்பிகா,

படிக்க ஆரம்பிக்கும் போது சந்தோஷத்தில் லேசான மனசு முடிக்கும் போது அழமுடியாத கனத்துடன்...

நல்லவர்கள் விட்டுச் செல்வது சந்தோஷங்களை மட்டுமே... அதில் உங்கள் மாமாவும் ஒருவர்.

நெகிழ்ச்சியான பதிவு.

சந்தனமுல்லை said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அம்பிகா அக்கா! எங்கள் வீட்டு ஆபிரஹாம் மாமாவையும் நினைவூட்டி விட்டீர்கள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு. இதை படிச்சதும் எனக்கு அந்த ஞாபகம் தான் வந்தது. அதை சொல்லி நான் அழுதப்ப கடைசியா பாக்க குடுத்து வெச்சது உனக்குன்னு என்னை சமாதானம் செய்தாங்க எல்லாரும்

Thenammai Lakshmanan said...

காலனைத்தோளில் வைத்துக் கொண்டுதான் வந்தான் போல என்ற வாசகம் திடுக்கிடச் செய்தது அம்பிகா

கமலேஷ் said...

மிக அழகாக எழுதி இருகிறீர்கள் வாழ்த்துக்கள்...