Monday, May 10, 2010

அண்ணன் மனைவிக்கு சிவப்பு சேலை.

.
கடைத்தெருவில் இருக்கும் அத்தனை ஜவுளிக்கடைகளின் முகப்பிலும்

தொங்கிக் கொண்டிருக்கின்றன, பளிச் என அடிக்கும், சிவப்புவண்ண

சேலைகள். ஜிகினா, ஜம்க்கி, எம்ப்ராய்டரி, ஸ்டோன்வொர்க் என வித

விதமாய் தகதக வென மின்னும் சேலைகள். கட்டினால் கரகம் மட்டுமே

பாக்கியாயிருக்கும். ஒரே சிவப்பு மயமாயிருக்கிறதே என விசாரித்தால்

இந்த வருடம், அண்ணன் மனைவிக்கு சிவப்பு சேலை எடுத்துக் கொடுக்க

வேண்டுமாம். ஆஹா...! மறுபடி ஆரம்பிச்சிட்டாங்கப்பா. .



ஏழெட்டு வருடங்களுக்கு முன், இப்படித்தான் சகோதரிகளுக்கு பச்சை

சேலைஎடுத்துக் கொடுக்க வேண்டுமென ஒரு வதந்தி பரவி, எங்கும்பசுமை

பூத்தது. `நல்லதங்காள்குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட ஆண்டு

அதனால் அண்ணன்களுக்கு ஆபத்து என்று காரணமும் சொன்னார்கள்.

பின்னர், மாமியார் மருமகளுக்கு மஞ்சள்சேலை எடுத்துக் கொடுக்க வேண்

டுமென்றதால் எங்கும் மங்களகரமான மஞ்சள் நிறைந்தது. சென்னையிலி

ருந்து வந்த என் நாத்தனார், `அண்ணீ, உங்களூக்கு சிவப்புசேலை எடுத்து

தர வேண்டுமாமே’ என ஆரம்பித்தாள். அடடா..! தலைநகரையும் வதந்தி

விட்டு வைக்கவில்லையா..?




பெண்களின் படிப்பறிவும், பகுத்தறிவும்...? முன்னேறி வரும் சூழலில்,

இத்தகைய மூடநம்பிக்கைகளும் அதிகரித்து வருவது வியப்பையும், எரிச்

சலையும் தருகிறது. ஜவுளித்துறையினரே இத்தகைய வதந்திகளை பரப்

புவதாகவும் சொல்லப் படுகிறது. எனக்கு என்ன கவலையென்றால்,

சொல்வதுதான் சொல்கிறார்கள், அழகான கத்தரிப்பூ நிறம், ஆகாய நீலம்,

சந்தனநிறம் என சொல்லக் கூடாதா? இப்படி சிவப்பு கலரு ஜிங்குச்சான்

பச்சைகலரு ஜிங்குச்சான்னு பாடுறாங்களே...



நான்கு நாட்களுக்கு முன் என் அண்ணி போன் செய்து, உங்களுக்கு சிவப்பு

சேலை எடுத்து தரனுமாமே’ என ஆரம்பிக்கவும், உண்மைவிளம்பியான

நான், `நீங்கள் எடுத்து தரவேண்டியதில்லை, நான்தான் உங்களுக்கு எடுத்து

தரணும். ஆனா நம்ம வீட்ல தான் யாருக்கும் அந்த நம்பிக்கை இல்லையே’

என்றேன். `அதெல்லாம் நம்பிக்கை இருக்கு. ஒழுங்கா சேலை எடுத்து தர்ற

வழியப் பாருங்க’ மிரட்டலோடு போனை வைத்தார்கள். `தவளை, தவளை’

என்று என்னை நானே கடிந்து கொண்டேன்...
.
.

30 comments:

சந்தனமுல்லை said...

:-))) funny!

ponraj said...

இன்னும் எத்தனை ஆண்டுத்தான் இப்படி மூடநம்மிகையை பெண்கள் நம்மிக்கொண்டு காலத்தை போக்குவார்களோ?
இந்த மூடந்ம்மிகையை எப்போது கைவிடுவார்களோ,(இது போல் பல)அப்போதுதான் 33% பற்றி யோசிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பே இல்லை..

VELU.G said...

//. `அதெல்லாம் நம்பிக்கை இருக்கு. ஒழுங்கா சேலை எடுத்து தர்ற

வழியப் பாருங்க’ மிரட்டலோடு போனை வைத்தார்கள்.
//

ஆமாங்க ஒழுங்கா சேலை எடுத்து தர்ற வழியப் பாருங்க

நல்லாயிருக்குங்க கதை

ஈரோடு கதிர் said...

ம்ம்ம்ம்... நடத்துங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சொல்லத்தான் நினைக்கிறேன்


good

க.பாலாசி said...

//ஏழெட்டு வருடங்களுக்கு முன், இப்படித்தான் சகோதரிகளுக்கு பச்சை

சேலைஎடுத்துக் கொடுக்க வேண்டுமென ஒரு வதந்தி பரவி, எங்கும்பசுமை//

வருஷத்துக்கு ஒன்னு கண்டுபிடிப்பாங்க போல...

பொடவையோட விட்டா பரவாயில்லையே... அட்சய திரிதின்னு வேற ஒன்னு கண்டுபிடிச்சிட்டானுவோ......

முகுந்த்; Amma said...

என்னது சிவப்பு சேலையா?, இது எப்போ இருந்து?.

ரெண்டு மாதத்துக்கு முன்னாடி மறுபடியும் பச்ச சேல வந்ததா சொன்னங்க எங்க அம்மா, இப்போ சிவப்பு சேலையா.

நல்லா கிளப்பி விடுராங்கன்கப்பா இந்த ஜவுளி கடை காரங்க.

ரிஷபன் said...

சொல்வதுதான் சொல்கிறார்கள், அழகான கத்தரிப்பூ நிறம், ஆகாய நீலம்,

சந்தனநிறம் என சொல்லக் கூடாதா?

அடுத்த தடவைக்கு அந்த கலர் பரப்பிரலாம்.. ஹா ,, ஹா..

சுந்தரா said...

அப்போ ஊருக்குவந்தா எனக்கு நாலு சேலை கிடைக்குமா?!

பில்லோட குடுத்தா கலரையாவது மாத்திக்கலாம் :)

பத்மா said...

அடடா இத என் நாத்தனார் காதில போடணுமே ! :))))
எத்தன சொல்லியும் திருந்தலாம் மாட்டாங்க .நல்ல பதிவு அம்பிகா

Anonymous said...

நல்ல வேலை! சேலையோட நிறுத்தி கிட்டாங்களே!. என்ன விலையிலேன்னு சொல்லவில்லையே! அடுத்தது தங்கம் இருக்கிற விலைக்கு எப்போ ஆரம்பிக்கபோரங்களோ!!!
-swami

பா.ராஜாராம் said...

:-))

அப்ப, அண்ணிகள் எல்லாம் மேல் மருவத்தூருக்கு மாலை போட்டது போல் இருப்பார்கள்.உள்ள அண்ணிகள் போக, கூடுதலா ஒண்ணு எடுத்து வைங்க அம்பிகா. எங்க வூட்ல கோச்சுக்கப் போறா.. :-)

கலர்ல கற்பனை பண்ணி பார்த்தேன். "ஐயோ..அம்மா" :-)

Chitra said...

business tactics..... mmmmm.....

funny!

செ.சரவணக்குமார் said...

ஆஹா, அவுட் ஆகாமலே வெளையாடுறாய்ங்களே......

அன்புடன் அருணா said...

ஆரம்பிச்சிட்டாங்கய்யா!ஆரம்பிச்சுட்டாங்கய்யா!

அமைதி அப்பா said...

//
பெண்களின் படிப்பறிவும், பகுத்தறிவும்...? முன்னேறி வரும் சூழலில்,

இத்தகைய மூடநம்பிக்கைகளும் அதிகரித்து வருவது வியப்பையும், எரிச்

சலையும் தருகிறது.//

உண்மைதான் மேடம். எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது.

சாந்தி மாரியப்பன் said...

I love TamilNadu. இங்கெ என்ன விசித்திரங்கள் வேணும்ன்னாலும் நடக்கும் :-))))).

அண்ணன்,தம்பிக்கு இன்ன கலரில் பேண்ட், ஷர்ட், ரேபன் கண்ணாடி எடுத்துக்கொடுத்தா நல்லதுன்னு, ஏன் எந்தக்கதையும் கட்டமாட்டேங்கிறாங்க!!!!.

சும்மாதான் said...

உங்கள ஒரு சிவப்பு புடவை எடுத்து தர சொன்னாங்க அப்படிங்குறதுக்காக இப்படி சொல்லிபுட்டீங்களே :-)

ஹேமா said...

அம்பிகா மத்தவங்க நம்பிக்கையைக் கெடுக்கவேணாம்.அவங்க நம்பிக்கையால நடுவில யார் யாரோவெல்லாம் பிழைப்பு நடத்துவாங்க.விடுங்க இவங்களை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்படியா விசயம்.. நாத்தனாருக்கு ஒரு மெயிலைப் ோடறேன்.. எனக்கு ஒரு சிவப்பு
டீசர்ட்டாவது எடுத்து வைக்கும்படி :)
ஆனாலும் உங்க அண்ணி செம கெட்டிக்காரங்களா இருக்காங்க.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

@அமைதிச்சாரல் எங்கங்க ஆம்ப்ளைங்க போடற சட்டையைப் பாத்திருக்கீங்களா?
போன வருசம் எடுத்த அதே ரோலில் இந்த வருசமும் சட்டையை எடுத்தாக்கூட
அதை அறியாம இருக்கவங்க .. அவங்களூக்கு எடுத்துக்கொடுக்கிறதுல
என்ன இருக்கு?

கண்ணகி said...

தவளை..தவளை...அன்பான தவளை..

சாந்தி மாரியப்பன் said...

@முத்துலெட்சுமி, இங்கே கலரோ, டிசைனோ விஷயமில்லை. 'செண்டிமெண்ட்' மட்டுமே. அதுதான் நம் பெண்களின் பலமும், பலவீனமும். பெண்கள் எவ்வளவு ஈஸியா ஏமாந்துடறாங்க. அவ்வளவே.

அதுவுமில்லாம ஆண்களோட ட்ரெஸ் சென்சை குறைச்சு எடை போட்டுடாதீங்க. நமக்கு மேல கடைக்காரங்களை வேலை வாங்குறவங்க அவங்க :-))))))))

ஹுஸைனம்மா said...

நாத்தனார்களுக்கு ஒவ்வொரு பண்டிகை, விழா, விசேஷங்களுக்குன்னு எப்பவும் சீர் கொடுத்து, நொந்துபோன ஏதாவது ஒரு அண்ணி கிளப்பிவிட்டதாயிருக்கும்!!
(சிரிக்க மட்டுமே!)

:-))))

தெய்வசுகந்தி said...

சிவப்பு கலரா????? இது எப்பலருந்து??

பா.ராஜாராம் said...

// @அமைதிச்சாரல் எங்கங்க ஆம்ப்ளைங்க போடற சட்டையைப் பாத்திருக்கீங்களா?
போன வருசம் எடுத்த அதே ரோலில் இந்த வருசமும் சட்டையை எடுத்தாக்கூட
அதை அறியாம இருக்கவங்க .. அவங்களூக்கு எடுத்துக்கொடுக்கிறதுல
என்ன இருக்கு?//

செம்ம டேமேஜ்...பாஸ்.

தில் இருந்தா இங்கயே இருக்கணும்.

எங்கயும் ஓடிரக் கூடாது...

போய், ஆம்பளைகளை கூட்டிட்டு வர்றேன். :-)

'பரிவை' சே.குமார் said...

நல்லா கிளப்பி விடுறாங்கய்யா பீதியைய்ய்ய்ய்ய்ய்ய்.......!

சரக்கு விக்காம இருந்தா இப்படியெல்லாம் கிளப்பி விடவேண்டியது... சரிதான்...

மூட நம்பிக்கைக்கு முக்காடு போட முடியாத நாம் பச்சை, சிவப்புன்னு வண்ணங்களை சுமக்க வேண்டியதுதான்.

VijayaRaj J.P said...

ஆண்களுக்கு ஆதரவான மூடநம்பிக்கை எதுவும்
இல்லையா?

அன்புடன் நான் said...

எங்க சக பதிவருக்கு...லீ ஜீன்ஸ் எடுத்து தரணுமுன்னு... யாராவது கிளப்பி விடுங்கப்பா....

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு:))!

கருணாகரசுவின் கோரிக்கையை யாராவது கவனியுங்கப்பா:)!